25 January 2010
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் 2010ம் ஆண்டில் நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள வினைத்திறமைகாண் தடைப்பரீட்சை மற்றும் பதவி உயர்வுப் பரீட்சைகள் தொடர்பான கால அட்டவணை இங்கு பிரசுரிக்கப்படுகின்றது. இது தொடர்பாக தங்கள் அமைச்சு /திணைக்களத்தில் கடமையாற்றும் தகுதிவாய்ந்த உத்தியோகத்தர்களுக்கு அறியத்தருமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதுடன் 2010.02.15ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைப் பெற்று தங்கள் சிபார்சுடன் எமக்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சரியானது என்பதை திணைக்களத் தலைவர் உறுதி செய்வது அவசியமானதாகும்.
சி.திருவாகரன்
செயலாளர்
மாகாணப் பொதுச் சேவை ஆணைக்குழு
வடக்கு மாகாணம்
திருகோணமலை.
2010 EB Circulation Application Form (Pdf)
2010 EB Circulation Application Form (Word)


















