கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடக்கில் உப சுங்கத் தடுப்பு பிரிவு திறந்து வைக்கப்பட்டது

34 வருடங்களின் பின்னர் சுங்கத்திணைக்களத்தின் வடக்கு மாகாணத்திற்கான அலுவலகம் காங்கேசன்துறையில் 10 ஆகஸ்ட் 2017 அன்று திறந்து வைக்கப்பட்டது. இந்முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட நிதியமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் இயங்கிய அலுவலகம் 1983 ஆம் ஆண்டு வட பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக செயலிழந்தது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு யாழ் பிரதான தபாலகத்தின் ஒரு பகுதியில் இயங்கியது. அது இன்று தனியான அலுவலகமாகத் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட வட மாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்கள் கருத்து தெரிவிக்கையில் இன்று திறந்து வைக்கப்பட்ட உப சுங்கத் தடுப்பு பிரிவில் பணிபுரிவதற்கு வடக்கின் தமிழ் இளைஞர்களைத் தெரிவு செய்ய வேண்டும் எனவும் வட மாகாணத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற பங்களிப்பிற்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண கடற்படை கட்டளை தளபதி, யாழ் மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை