கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வடமாகாண ஆளுநரினால் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முன்னாள் அதிபரின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது

சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியத்தின் உருவச் சிலை 2017 செப்ரெம்பர் 07 அன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு சிலையத் திறந்து வைத்தார்.

வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் மதிப்புமிக்க பாடசாலையாக இப் பாடசாலையை உருவாக்குவதற்கு தனது முழு ஒத்துழைப்பையும் வழங்கியதை கௌரவித்து அவரின் உருவச் சிலையானது பாடசாலை பழைய மாணவர் சங்கத்தால் அமைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் வெளிச்சம் இன்றி, கட்டடங்கள் இன்றி, ஏனைய வசதிகள் இன்றி நல்ல பெறுபேறுகளைப் பெற்று, கல்வியில் சிறந்து உயர் பதவிகளில் இடம் பிடித்த தமிழ் மக்கள் இன்று கல்வியில் பின்தள்ளப்பட்டுள்ளனர் எனவும் கல்வியில் உயர்வடைந்தால் மட்டுமே பல சாதனைகளை நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.

மேலும் கௌரவ ஆளுநர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியம் அவர்கள் இந்த பாடசாலைக்கு, மாணவர்களின் கல்விக்கு தனது முழு சக்தியையும் வழங்கியிருக்கின்றார். அவரைப் போன்ற ஆசிரியர்கள் அந்தக் காலத்தில் இருந்ததன் காரணமாகத்தான் வடக்கு மாகாண மக்கள் கல்வியில் உயர்வடைந்தார்கள். அவரைப்போல் தற்போது இருக்கின்ற ஆசிரியர்களும் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வான், செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள், முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியம் அவர்களின் குடும்பத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை