கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் ஜனாதிபதி கலந்து கொண்டார்

வவுனியா மாவட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வு வவுனியா சைவப் பிரகாச மகளிர் கல்லூரியில் 21 ஒக்ரோபர் 2017 அன்று இடம்பெற்றது.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘உத்தியோகபூர்வ பணி’ ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 63  பிரதேச நிகழ்ச்சித்திட்டங்களை நிறைவு செய்து தேசிய ரீதியாக இடம்பெறும் மூன்றாவது தேசிய நிகழ்ச்சித்திட்டம் வவுனியா மாவட்டத்தை மைமயப்படுத்தப்பட்டிருந்தது.

வவுனியா மாவட்டத்தில் நிரந்தர காணி உறுதிகள் இல்லாத மக்களுக்கு 5000 காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தல், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்குதல், தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சிதிட்டத்தின் கீழ் தெங்கு அபிவிருத்தி சபையினால் தென்னங் கன்றுகளை வழங்குதல், வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்குத் தேவையான இரண்டு பௌசர்களை பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

”உத்தியோகபூர்வ பணி” ஜனாதிபதி மக்கள் சேவை நடைபெற்ற வளாகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், இதன்போது முன்வைக்கப்பட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன, அமைச்சர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.பி.நாவின்ன, ரிஷாட் பதுர்தீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாராளுமன்ற உறுப்பினர்களான கே.காதர் மஸ்தான், எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை