கௌரவ ஆளுநர்

 

கௌரவ
ரெஜிநோல்ட் குரே

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375

தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்: reginoldcooray@gmail.com

 

ஆளுநரின் செயலாளர்

illangovan

திரு.இ.இளங்கோவன்
ஆளுநரின் செயலாளர் 

ஆளுநர் செயலகம்,
காட்டுக்கந்தோர் ஒழுங்கை,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்

 

தொ.இல: +94-21-222 0660
தொ.நகல்: +94-21-222 0661 கைபேசி: 0773868565

மின்னஞ்சல்:
ilaangovan@gmail.com

பணிக்கூற்று

வடக்கு மாகாணசபையின் முழுநிலையான முகாமைத்துவம்.

செய்திகளும் நிகழ்வுகளும்

கொக்குளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றது

கொக்குளாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 14 நவம்பர் 2017 அன்று நடைபெற்ற  மரம் நடுகை நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர்  றெஜிநோல்ட் குரே கலந்து கொண்டார். பாடசாலை அதிபர் திருமதி வி .பத்மநாதன்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகள் இடம்பெற்றன. ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன் மற்றும் சுபோதி  மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் உலக அளவில் வளர்ச்சி அடைந்தமைக்கு அங்கு உள்ள மக்களே காரணம். அவர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையே அதற்கு காரணமாக அமைவதாகவும் இனம், மதம்,மொழி, என்ற பாகுபாட்டினை கீழே வைத்துவிட்டு மனிதநேயத்தை மேலே வையுங்கள். அதன் மூலமே இந்த நாட்டினை அபிவிருத்தி செய்யமுடியும் எனவும் வடமாகாண ஆளுநர் றெஜிநோல்ட் குரே தனது உரையில் தெரிவித்தார்.

தமிழ் பாடசாலை, சிங்கள பாடசாலை, முஸ்லீம் பாடசாலை என்ற பாகுபாடு இல்லாமல் செய்யப்பட வேண்டும். மூவின மாணவர்களையும் ஒன்றாக ஓர் இடத்தில் கல்வி புகட்டும் நிலை ஏற்படுத்தப்படவேண்டும் இதன் மூலம் அடுத்த சந்ததி எந்தவித பாகுபாடு இன்றி நாம் இலங்கையர் என்று வாழும் நிலை எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும்,  இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதுபோன்று தென்னிலங்கை பாடசாலை மாணவர்கள் வட மாகாணம் வரவேண்டும் இங்குள்ள மாணவர்கள் அங்கே சென்று மரங்களை நாட்டி உறவை வலுப்படுத்த வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

 

departments tamil

ஆளுநர் பதவியேற்பு

hg swearing thumb

ஆளுநரின் ஆவணங்கள்

  1. சுயவிபரம்
  2. முதன்மையுரை
  3. குறிப்பாணை