chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம் 
இல. 63, நல்லுார் குறுக்குத் தெரு, நல்லுார், யாழ்ப்பாணம்
இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

2017 ஆம் ஆண்டின் வருடாந்த அபிவிருத்தித் திட்டத்திற்கான நிதி ஆணைக்குழுவுடனான கலந்துரையாடல்

வட மாகாண சபையின் பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் தலைமையில் 2017 ஆம் ஆண்டில் அமுல்படுத்தப்படும் வருடாந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பான நிதி ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் 10 மாச் 2017 அன்று வடமாகாண சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் நிதி ஆணைக்குழுவின் தலைவர் யூ.எச்.பல்லிகக்கார, நிதி ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.ரி.எம்.யூ.டி.பி.தென்னக்கோன், தேசிய திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.எம்.ஆர்.எஸ்.பண்டார மற்றும் நிதி ஆணைக்குழுவில் இருந்து வருகைதந்த தொடர்புடைய அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றதுடன் 2017 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டத்தினை அமுல்படுத்த உப்புதல் வழங்கினர்.

அனைத்து துறைசார் அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகள் விரிவாக ஆராயப்பட்டதுடன் இவ் ஆண்டுக்கான அனைத்து துறைசார் அபிவிருத்தித் திட்டச் செயற்பாடுகளும் ஆண்டு இறுதிக்கு முன்னர் நிறைவு செய்யப்பட வெண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அனைத்து மாகாண செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் இக் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.