கௌரவ. முதலமைச்சர்

கௌரவ நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன்

முதலமைச்சர்
வடக்கு மாகாண சபை 

முதலமைச்சர் அமைச்சு, 

கண்டிவீதி,கைதடி. 

இலங்கை.

 
தொ.பே: +94-21-3202465
தொ.நகல்: +94-21-2217227
மின்னஞ்சல்:
cv.wigneswaran@gmail.com

 

முதலமைச்சரின் செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்
செயலாளர்
உள்ளூராட்சி, தொழிற்துறை மற்றும் காணிகள் அமைச்சு 

கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7110

மின்னஞ்சல்:

rubinivarathan@yahoo.com

 

முதலமைச்சர் செயலகம்

கிளிநொச்சி சந்தைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்கள நிதி ரூபா 10.25 மில்லியன் மற்றும் கரைச்சி பிரதேச சபை நிதி ரூபா 10 மில்லியன் செலவில் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி சந்தைக் கட்டடம் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 12 யூன் 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

முல்லைக் கடற்கரை பொதுமக்கள் பாவனைக்காக புனரமைக்கப்பட்டது

வடமாகாண முதலமைச்சரின் அமைச்சின் சுற்றுலா துறையின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதி ரூபா 3.6 மில்லியன் செலவில் அழகுபடுத்தப்பட்ட கரைத்துறைப்பற்றுப் பிரதேசசபையின்  முல்லை கடற்கரை 09 யூன் 2017 அன்று முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

Read more...

முல்லைத்தீவு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கான விடுதி திறந்து வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மணற்குடியிருப்புப் பிரதேசத்தில்  அமைக்கப்பட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கான விடுதியானது முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 09 யூன் 2017 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

Read more...

நீர் வழங்கல் திட்டம் வற்றாப்பளையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

வடமாகாண உள்ளூராட்சித் திணைக்களத்தின்  மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ரூபா 8.78 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் வற்றாப்பளை நீர் வழங்கல் திட்டம் வடமாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் 09 யூன் 2017 அன்று மக்கள் பாவனைக்காக சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

தண்ணீரூற்றுப் பொதுச் சந்தை திறந்து வைக்கப்பட்டது

தண்ணீரூற்றுப் பொதுச்சந்தையானது மக்கள் பாவனைக்காக முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 09 யூன் 2017 அன்று சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

புதுக்குடியிருப்பில் புதிய சந்தைத் தொகுதி திறந்து வைக்கப்பட்டது

உலக வங்கி மற்றும் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் நிதியுதவியுடன் வடக்கு கிழக்கு உள்ளூராட்சி சேவைகள் மேம்படுத்தல் திட்டத்தின் கீழ் ரூபா.9.19 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட புதிய சந்தைத் தொகுதி முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் 09 யூன் 2017 அன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.

Read more...