கௌரவ. முதலமைச்சர்

கௌரவ நீதியரசர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன்

முதலமைச்சர்
வடக்கு மாகாண சபை 

முதலமைச்சர் அமைச்சு, 

கண்டிவீதி,கைதடி. 

இலங்கை.

 
தொ.பே: +94-21-3202465
தொ.நகல்: +94-21-2217227
மின்னஞ்சல்:
cv.wigneswaran@gmail.com

 

முதலமைச்சரின் செயலாளர்

திருமதி.ஆர்.வரதலிங்கம்
செயலாளர்


முதலமைச்சரின் அமைச்சு 
கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

தொ.இல: 21-205 7110
தொ.நகல்: 21-205 7110

மின்னஞ்சல்:

rubinivarathan@yahoo.com

 

முதலமைச்சர் செயலகம்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் அமைச்சினால் கருத்தரங்கும் கலாச்சார நடைபவனியும் நடாத்தப்பட்டது.

 width=500சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடந்த 25.09.2017ம் திகதி வடக்கின் பண்பாடு, கலாசாரம் சார்ந்த சுற்றுலாத் துறை அபிவிருத்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காலை நடைபெற்ற கலாச்நசார நடைபவனியை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர்.க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தின் முன்றலில் ஆரம்பித்து வைத்தார். இந்நடைபவனியில் வடக்கின் பண்பாடுகள், கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை பறைசாற்றுகின்ற வகையிலான கலைகள், இசைகருவிகள், பழமை வாய்ந்த வாகனங்கள் என்பவற்றுடன் சுற்றுலா துறைசார்ந்த நிறுவனங்கள், ஹோட்டல்கள், அரச அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 மாலை நிகழ்வு முதலமைச்சரின் அமைச்சின் செயலாளர் திருமதி.ரூபினி வரதலிங்கம் தலைமையில் நடைபெற்றது,  வடக்கின் பாரம்பரியங்கள், பண்பாடு, கலாசாரம் சார்ந்த சுற்றுலாத் துறை அபிவிருத்திக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கருத்தரங்கிற்கு முதலமைச்சரின் சார்பில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மகளிர் விவகார அமைச்சர் திருமதி.அனந்தி சசிதரன், வடக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் அமைச்சின் செயலாளர்கள் பிரதிப் பிரதம செயலாளர்கள் திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைச் செயலாளர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சினால் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான ஆரம்ப தந்திரோபாய திட்டம், சுற்றுலா வழிகாட்டி புத்தகம், சுற்றுலா தகவல்கள் அடங்கிய கையேடுகள் வெளியிடப்பட்டதுடன் வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறைக்கான இணையத்தளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500

 width=500