கிளிநொச்சி மாயவனூர் கிராமத்திற்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் விஜயம்

கிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் கிராமத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் வடமாகாண விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நிகழச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் 03.04.2018 அன்று பார்வையிட்டார்.

அந்நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சின், அமைச்சர் கந்தையா சிவநேசன், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் மேலதிகப் பணிப்பாளர் ர்.னு.ஹெட்டியாராட்சி, தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்த்திற்குமான அலுவலகத்தின், வடமாகாண இணைப்பாளர் விஸ்வலிங்கம், திட்டமிடல் பணிப்பாளர் கு.ஜோன்சன், வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், வடமாகண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.வே.பிறேமகுமார், வடமாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.வசீகரன், கரைச்சிப் பிரதேச செயலகத்தின், பிரதேச செயலர் ரி.முகுந்தன், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பூ.உகநாதன், கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.சுதாகரன், கால் நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண பணிப்பாளர் வைத்தியர்.செ.கௌரிதிலகன், கிளிநொச்சி மாவட்ட நீர்;ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி.பரணீதரன், திணைக்களங்களது அலுவலர்கள் மற்றும்  பயனாளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.