விவசாயத் திணைக்களம்

பணிக்கூற்று

மாகாணத்தில் விரிவாக்க சேவையின் அடிப்படையில் பயன்மிக்க வலுவான சேவைகளை தேவைப்படும் விவசாய குடும்பங்கள் மற்றும் தேவையுடைய மக்களுக்கு உச்ச வளப்பயன்பாட்டின் மூலம் சமநிலையான நிலைபேரான விவசாய அபிவிருத்தி மற்றும் வர்த்தக விவசாயத்தின் மூலம் பலமிக்க சமூக பொருளாதார அபிவிருத்தியை அடைதல்.

 

செயற்பாடுகள்

  • விவசாய சமூகத்திற்கு விவசாய களம் தொடர்பான அறிவையும் திறனையும் வழங்குவதுடன் முன்னேற்றகரமான தொழில்நுட்பங்களை செயன்முறை வழிகாட்டல், வயல் விழாக்கள், பயிற்ச்சிகள், கூட்டங்கள், குழு விவாதங்கள், முகாம்கள் என்பன மூலம் வழங்குதல்.

  • 161 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளிலும் மற்றும் 5 மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்களிலும் தேவையான களப்பயிற்சியினை விவசாயிகளிற்கு வழங்கல்.

  • 5 மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்களை விவசாயத் தொழில்நுட்ப பூங்காக்களாக விருத்தி செய்தலும் பராமரித்தலும்.

  • 5 மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையங்களிலும் மற்றும் தெரிவு செய்யப்பட்ட விவசாய வயற்களிலும் விவசாயக் கண்காட்சிகளை நடாத்துதல்.

  • மாகாணத்திற்கு உள்ளும் ஏனைய பகுதிகளிலும் உள்ள ஆராய்ச்சி நிலையங்கள் பயிற்சி நிலையங்கள் ஏனைய விவசாயிகளின் பயிர்நிலங்கள் போன்றவற்றிற்கு விவசாயிகளை கள விஜயத்திற்கு அழைத்துச் செல்வதும் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் பாவிக்கப்படும் வேறுபட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான கல்வியை வழங்குதலும் அவற்றைப் பாவிப்பதை உறுதிப்படுத்தலும்.

  • மீள்குடியேறிய மற்றும் வறுமைக் கேட்டிற்கு உட்பட்ட விவசாயிகளுக்கு தேவையான விதை, நடுகைப்பொருட்கள், விவசாய கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் வழங்குதல்

  • அரச விதை உற்பத்தி பண்ணை மூலம் விதை மற்றும் நடுகைப்பொருட்களை ஒப்பந்த வளர்ப்பு தொகுதியூடாக உற்பத்தி செய்தல்

  • தெரிவு செய்யப்பட்ட இடங்களில் செயன்முறை பகுதி மற்றும் விதை உற்பத்தி அலகை ஸ்தாபித்தலும் பராமரித்தலும்

  • கிளிநொச்சியிலுள்ள சேவைக்கால பயிற்சி நிலையத்தை மீள நிர்மானித்து பயிற்சி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதன் மூலம் வழமையான சேவைக்கால பயிற்சியினை உத்தியோகத்தர்களுக்கு வழங்கி அவர்களது ஆற்றலை கட்டியெழுப்புதல்

  • சமூக அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் விவசாய உற்பத்திகளை வர்த்தக முறையில் கொண்டு செல்வதற்;கும் விற்பனை செய்வதற்கும ஆவனசெய்தல்