வட மாகாண சபை தவிசாளர் தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையேற்றார் – 30 ஒக்ரோபர் 2013

வட மாகாண சபை தவிசாளர் சி.வி.கே சிவஞானம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டத் தொகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக 30 ஒக்ரோபர் 2013 அன்று கடமையேற்றுக் கொண்டார்.

Read more...

வட மாகாண சபையின் முதலாவது அமர்வு – 25 ஒக்ரோபர் 2013

வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டத் தொகுதியில் 25 ஒக்ரோபர் 2013 அன்று  நடைபெற்றது.

கடந்த செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி வட மாகாண சபைக்கான தேர்தல் நடாத்தப்பட்டு 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதனையடுத்து உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகளும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வுகளும் கடந்த வாரங்களில் இடம்பெற்றன.

Read more...

வட மாகாண சபையின் புதிய உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது – 24 ஒக்ரோபர் 2013

வட மாகாண சபையின் புதிய உறுப்பினர்களுக்கான ஒரு நாள் அறிமுக செயலமர்வு யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ விடுதியில் 24 ஒக்ரோபர் 2013 அன்று நடைபெற்றது. வட மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடன் இச்செயலமர்வினை நடாத்தியது. வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.

Read more...