கிராமியவிரிவாக்கம் மற்றும் சேதனபயிர்ச் செய்கையில் மேலதிக எண்ணக்கருக்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறை

ளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 20.02.2019 தொடக்கம் 21.02.2019 வரை தகைநிலைப் பேராசிரியர் திரு.ந.ஸ்ரீPஸ்கந்தராஜா அவர்களினால் கிராமிய விரிவாக்கம் மற்றும் சேதனபயிர்ச் செய்கையில் மேலதிக எண்ணக்கருக்கள் தொடர்பான பயிற்சிப் பட்டறையானது மாகாண விவசாயத் திணைக்களத்தின் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்டது.

Read more...

கிளிநொச்சி மாவட்டமத்தில் படைப்புழுவிற்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி

நாட்டில் தற்பொழுது பயிர்ச்செய்கையில் எழுந்துள்ள பெரும் பிரச்சினையாக படைப்புழுவின் தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் தாக்கம் கிளிநொச்சி மாவட்டத்தில் சில பிரதேசங்களில் கண்டறியப்பட்டு தற்பொழுது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனாலும் இப் படைப்புழுவானது 100 இற்கும் மேற்பட்ட பயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்த வல்லது. 

Read more...

வரிசை முறை விதையிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்ச் செய்கை சம்பந்தமான அறிமுக வயல்விழா

வரிசை முறை விதையிடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட நெற்செய்கை சம்பந்தமான அறிமுக வயல்விழா 31.01.2019 ஆம் திகதி காலை 10.30 மணியளவில்  நவாலி வடக்கிலுள்ள திரு. உதயசூரியர் எனும் விவசாயியின் 'தெனி" நெல் வயலில் சண்டிலிப்பாய் விவசாயப் போதனாசிரியர் திரு. ஜீவன் குரூஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

Read more...

மாகாண மட்டத்திலான படைப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

வடக்கு மாகாண விவசாய அமைச்சு, வடக்கு மாகாண விவசாயத் திணைக்களம் மற்றும் மத்திய விவசாயத் திணைக்களம் என்பன இணைந்து ஒழுங்குபடுத்திய மாகாண மட்டத்திலான படைப்புழுவினைக் கட்டுப்படுத்துதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களின் தலைமையில் 29.01.2019 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

Read more...

வடக்கு மாகாணத்தில் படைப் புழுக்களின் தாக்கம்

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் படைப்புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளது அந்த வகையில் வடக்கு மாகாணத்திலும் சோளம் மற்றும் கௌபி பயிர் செய்கையில் படைப் புழுக்களின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக வடக்கு மாகாண விவசாயத்திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்தார். ஆரம்பத்தில் சோளப் பயிர்செய்கையில் ஏற்பட்ட படைப் புழுக்களின் தாக்கம் தற்போது ஏனைய பயிர்கள் மீதும் தாக்கியுள்ளது. இதனால் பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

Read more...

இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலைமை - 28.01.2019

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இரணைமடுக் குளமானது வவுனியாவின் சேமமடுக் குளத்திலிருந்து உற்பத்தியாகி முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஊடாக 60 கிலேமீற்றர் தூரம் பயணிக்கும் கனகராஜன் ஆற்றின் மூலமாக நீரினை பெற்றுக்கொள்கின்றது. 

Read more...