யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

Read more...

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் அமைச்சு செயலகத்தில் நாளை (06) கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நடைபெறவுள்ளது.

Read more...

இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

இந்து குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை 04 மார்ச் 2019 அன்று முற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது வடமாகாணத்தில் மதங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் மற்றும் வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. 

Read more...

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி  சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண  பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அறிவித்துள்ளார்.

Read more...

சுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி – கௌரவ ஆளுநர் சந்திப்பு 

சுவிஸ் அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சினுடைய சமஷ்டி தொடர்பான திணைக்களத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மாட்டின் ஸ்ரெரர்ஷிங்கர்  அவர்கள் கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களை இன்று (01) நண்பகல் ஆளுநர் அலுவலகத்தில் சந்திந்தார். 

Read more...

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் தலைமையில் மாணவர்களிடம் கையளிப்பு

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இரு பாடசாலைக்கட்டடங்கள் கௌரவ ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் 01 மார்ச் 2019 அன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட்டன.

Read more...