பிரதம செயலாளர் செயலகம்

மாகாணத் திட்டமிடல் குழு கூட்டம் – 04 யூலை 2013

வட மாகாண திட்டமிடல் குழுக் கூட்டம் 04 யூலை 2013 அன்று யாழ் பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இரண்டாம் காலாண்டுக்கான முன்னேற்ற மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் இக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் இ.உமாகாந்தன், பிரதிப் பிரதம செயலாளர் - நிதி ஆர்.பத்மநாதன், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், அரசாங்க அதிபர்களின் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் இக்கூட்டத்திற்கு சமுகமளித்திருந்தனர்.

இக் கூட்டத்தில் ஒவ்வொரு துறையினதும் முன்னேற்றங்கள் விரிவாக மீளாய்வு செய்யப்பட்டன.