பிரதம செயலாளர் செயலகம்

டிப்ளோமா பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு-10 யூலை 2013.

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியில் டிப்ளோமா  பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வானது 10 யூலை 2013 அன்று யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கினார்கள்.  

இந்நிகழ்வு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றது. உடற் கல்வி டிப்ளோமா, ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமா,  தகவல் தொழில்நுட்பத்தில் உயர் தேசிய டிப்ளோமா ஆகியவற்றை பூர்த்தி செய்த 196 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

56 உடற் கல்வி டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனமும், 43 உடற்கல்வி டிப்ளோமாதாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனமும், 39 ஆங்கிலத்தில் உயர் தேசிய டிப்ளோமாதாரிகள், சிங்கள மொழிமூல 27 ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகள்,  29 தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமாதாரிகள், 02 சிங்களமொழி மூல தகவல் தொழில்நுட்ப உயர் தேசிய டிப்ளோமாதாரிகளுமாக மொத்தம் 196 பேர் நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு இ.இளங்கோவன், மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாணக்கல்வி அமைச்சு, திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.