அறிவு மைய செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் -26 யூலை 2013.

மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டவாறு இலங்கையை அறிவு மையமாக மாற்றும் முயற்சியின் அடித்தளமாக பாடசாலைகளை அறிவு மையமாக மாற்றும் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டமொன்று கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் வட மாகாண பிரதம செயலாளர் திருமதி.விஜயலட்சுமி ரமேஸ் தலைமையில் 26 யூலை 2013 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் உலக வங்கியின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல் குழுத்தலைவர் டாக்டர். விசாகா, உலக வங்கியின் ஆலோசகர்கள், உள்ளுராட்சி அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண கல்விப் பணிப்பாளர், வலய கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் கல்வித்திணைக்கள உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.