NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

 • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

  யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

 • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

 • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

 • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

 • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

  சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது – 03 ஆகஸ்ட் 2013

இலங்கையின் வட பகுதி வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலையினை அதிமேதகு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களால் 03 ஆகஸ்ட் 2013 அன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 150 மில்லியன் டொலர் செலவில் இந்த ஆடைத்தொழிற்சாலை இத்தாலி நாட்டு நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. வவுனியா நகரில் இருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவில் நிறுவப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் ஆரம்பத்தில் 250 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிட்டியிருக்கின்றது. நாளடைவில் இங்கு மூவாயிரம் பேர் வரையிலான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டிருக்கின்றது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வட மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்திச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இன, மத, குல பேதங்களைக் கைவிட்டு அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றதுடன், பிரிவினை வாதத்திற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். வட மாகாணத்தினை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே பல மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்திப் பணிகளுக்கென மேலும் நிதி செலவிடப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வைபவத்தில் இலங்கைக்கான இத்தாலிய நாட்டு தூதுவர், அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன, திஸ்ஸ கரலியத்த மற்றும் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]