NPC Header

அண்மைய நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

  • யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர் கோரிக்கை

    யாழில் படையினர் வசமுள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஆளுநர்...

  • வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

    வலிகாமம் வடக்கில் ஒரு தொகுதி காணிகள் விடுவிப்பு

  • கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

    கௌரவ ஆளுநரின் பொதுமக்கள் தினம் -06 மார்ச் 2019

  • இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

    இந்து குருக்கள் சபையின் தலைவர் - ஆளுநர் சந்திப்பு 

  • சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

    சிவராத்திரி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை

வட மாகாண விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் – 02 ஆகஸ்ட் 2013

”வட மாகாணத்தில் விவசாயத்துறை துரிதமாக அபிவிருத்தியடைந்து வருகின்றது. வட மாகாணம் பல அத்தியவசிய பொருட்களின் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.”

வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாயப் பொருட்களை அய்க்கோ நிறுவனத்தின் ஊடாக ஏற்றுமதி செய்து சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை வட மாகாண விவசாய திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இதற்கமைய வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை மேற்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.பொது நூலக வட மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.

விவசாயத்திணைக்களத்தின் பணிப்பாளர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் பிரதம விருந்தினராக வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.

குறிப்பாக ஐந்து மாவட்டங்களிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற மரவள்ளி, பச்சை மிளகாய், பப்பாசி, சாம்பல் வாழை போன்ற உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாடு மற்றும் தென் பகுதியில் சந்தை வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இவ்வாறான பொருட்களின் உற்பத்தியினை ஊக்குவித்து ஏற்றுமதி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களின் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




ஆளுநர்
கௌரவ 
கலாநிதி சுரேன் ராகவன்

ஆளுநர் செயலகம்
பழைய பூங்கா, கண்டி வீதி,

சுண்டுக்குளி,யாழ்ப்பாணம்,

இலங்கை.
 

தொ.பே.: +94-21-2219375
தொ.நகல்: +94-21-2219374

மின்னஞ்சல்:hgnp.op@gmail.com

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

செங்கோல் கொடி

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

நீலநிற ஓரமானது மாகாணத்தின் கடல் வளத்தினையும் பச்சை நிறமானது பசுமை, மற்றும் விவசாயத்தினும் குறித்து நிற்கின்றது.. [மேலும்..]