விவசாய அமைச்சு

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார் – 14 ஒக்ரோபர் 2013

வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கைத்தொழில், வர்த்தக வாணிப முயற்சி, கிராம அபிவிருத்தி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தனது கடமைகளை யாழ்ப்பாணம் செட்டித்தெரு வீதியிலுள்ள தனது அலுவலகத்தில் 14 ஒக்ரோபர் 2013 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அமைச்சின் செயலாளர் எந்திரி.ஏ.ஈ.எஸ்.ராஜேந்திரா மற்றும் உயர் அதிகாரிகளால் பாரம்பரிய முறைப்படி அமைச்சர் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெற்றது. அடுத்து  கடமைகளை பொறுப்பேற்கும் ஆவணத்தில் கையொப்பமிட்டார்.

ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், பிரதி பிரதம செயலாளர் (நிதி) ஆர்.பத்மநாதன் வட மாகாண கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர் திரு.ஜே.ஜே.பெலிசியன், வீதி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் எந்திரி.ரி.சிவராஜலிங்கம் மற்றும் உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.