Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
வட மாகாண சுகாதார அமைச்சர் தனது கடமைகளை வைபவரீதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் – 14 ஒக்ரோபர் 2013

சுகாதார அமைச்சு

வட மாகாண சுகாதார அமைச்சர் தனது கடமைகளை வைபவரீதியாக பொறுப்பேற்றுக் கொண்டார் – 14 ஒக்ரோபர் 2013

வட மாகாண சுகாதார சேவைகள், சுதேச மருத்துவ அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் தனது கடமைகளை வைபவரீதியாக யாழ்ப்பாணம் பண்ணையிலமைந்துள்ள தனது அலுவலகத்தில் 14 ஒக்ரோபர் 2013 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாரம்பரிய முறைப்படி அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மற்றும் திணைக்களத் தலைவர்களால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அடுத்து கடமைகளை பொறுப்பேற்கும் ஆவணத்தில் அமைச்சர் கையொப்பமிட்டார்.

ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி (திருமதி) எஸ்.ஆர்.யூட், சுதேசவைத்திய திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி.(திருமதி).சி.துரைரட்ணம், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்கள்,  உயர் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.