assembly secretariat2

பேரவை தலைவர்

கௌரவ. கந்தையா சிவஞானம்

கௌரவ பேரவைத் தலைவர் வடமாகாண சபை

மாகாண சபைச் செயலகம், கண்டி வீதி,
கைதடி, யாழ்ப்பாணம் இலங்கை.

 
தொ.பே: +94-21-2057084

 

செயலாளர்

திரு . ஆர்.வரதீஸ்வரன்
செயலாளர்
பேரவைச் செயலகம் 

பேரவைச் செயலகம் கண்டி வீதி, கைதடி, யாழ்ப்பாணம்
இலங்கை

 

தொ.இல: 021-205 7085
தொ.நகல்: 021-205 7086  கைபேசி: 077 694 4144

மின்னஞ்சல்:
councilnpc@gmail.com

 

வட மாகாண சபையின் புதிய உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது – 24 ஒக்ரோபர் 2013

வட மாகாண சபையின் புதிய உறுப்பினர்களுக்கான ஒரு நாள் அறிமுக செயலமர்வு யாழ்ப்பாணத்திலுள்ள ரில்கோ விடுதியில் 24 ஒக்ரோபர் 2013 அன்று நடைபெற்றது. வட மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் அனுசரணையுடன் இச்செயலமர்வினை நடாத்தியது. வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி, வட மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்கள்.

மாகாண சபையின் அமைப்பு மற்றும் ஒழுங்குகள், ஒழுக்க விதிகள், சட்டங்கள், 13ம் திருத்தச் சட்டம், 1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபைகள் சட்டம் மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கங்கள் வழங்கப்பட்டன. இவற்றோடு தொடர்புடைய புத்தகங்கள், கையேடுகள் ஆளுநர் செயலகத்தினாலும் ஏசியன் பவுண்டேசன் நிறுவனத்தினாலும் வழங்கப்பட்டன.

வட மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் உத்தியோகத்தர்கள், பேரவைச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.



செங்கோல்

சனநாயகத்தின் அதிகாரச் சின்னமாக விளங்குவது செங்கோல். ”நீதி பரிபாலனம்” செய்யும் குறிப்பை உணர்த்தும் தண்டம் ”தர்மத்தின் வடிவம்”.. [மேலும்..]

தலைவரின் மேலங்கி