வட மாகாண சபையின் முதலாவது அமர்வு – 25 ஒக்ரோபர் 2013

வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கட்டத் தொகுதியில் 25 ஒக்ரோபர் 2013 அன்று  நடைபெற்றது.

கடந்த செப்ரெம்பர் மாதம் 21ம் திகதி வட மாகாண சபைக்கான தேர்தல் நடாத்தப்பட்டு 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இதனையடுத்து உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகளும், முதலமைச்சர், அமைச்சர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வுகளும் கடந்த வாரங்களில் இடம்பெற்றன.

வட மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது முதல் நிகழ்வாக 15 ஒக்ரோபர் 2013 அன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வட மாகாண ஆளுநரின் பிரகடனம் வட மாகாணசபை பேரவைச் செயலாளர் திரு.ஜி.கிருஷ்ணமூர்த்தினால் மூன்று மொழிகளிலும் வாசிக்கப்பட்டது . அதனைத் தொடரந்து சபையின் தவிசாளர், மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகள் இடம்பெற்றன. இதன்போது தவிசாளராக கந்தையா சிவஞானமும் பிரதி தவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள். 

தொடந்து தவிசாளர் தலைமையில் முதலமைச்சர் உரை, எதிர்க்கட்சி தலைவர் உரை என்பன இடம்பெற்றன. அத்துடன் உறுப்பினர்களின் கன்னி உரைகளும் இடம்பெற்றன. 

வட மாகாண சபையின் இரண்டாவது அமர்வு 11 நவம்பர் 2013 அன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.