பிரதம செயலாளர் செயலகம்

2014ம் ஆண்டு பாதீட்டினை அமுல்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு

 

2014ம் ஆண்டு பாதீட்டினை அமுல்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு திறைசேரி மற்றும் நிதி, திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர தலைமையில் 16 டிசெம்பர் 2013 அன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. 

பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.பி.அபயகோன், வடக்கு மற்றும் வட மத்திய மாகாண பிரதம செயலாளர்கள், வட மாகாணம் மற்றும் அனுராதபுரம், புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த அரச அதிபர்கள், சகல மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.

2014ம் ஆண்டுக்கான பாதீடானது இலங்கையை மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைய வழிவகுக்கும் என கலாநிதி பி.பி.ஜயசுந்தர தனது உரையில் தெரிவித்தார். தேசிய அபிவிருத்தி இலக்கினை அடைய ஒவ்வொரு மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், உள்ளூராட்சி சபைகள், கிராம சேவகர் பிரிவுகள் என்பன ஒன்றுபட்டு செயலாற்ற வேண்டுமென அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.