பிரதம செயலாளர் செயலகம்

வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டிற்கான முதலாவது வேலை நாள் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

alt

 

எதிர்கால சந்ததியினருக்கான தேசிய ஒற்றுமையினை ஒன்று திரட்டும் அதே வேளை சமூக பொருளாதார அபிவிருத்தியினை எய்துவதற்கு ஏதுவாக அனைத்து அரச ஊழியர்களும் அற்பணிப்புடன் ஒன்றிணைந்து செயலாற்ற உறுதிபூணுவோம் எனும் மனோபாவத்தினை மனதில் நிலைநிறுத்தி செயலாற்றவேண்டும் எனும்  தேவைப்பாட்டினை அனைத்து அரச அலுவலர்களுக்கும் வலியுறுத்தும் வகையில் அனைத்து அரச அலுவலர்களினதும் பங்கேற்றலுடன் விசேட வைபவமாக ஒழுங்கு செய்யப்பட்ட வட மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டடிற்கான முதலாவது வேலை நாள் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

இவ்விசேட வைபவமானது பிரதம செயலாளர் செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது. தேசிய மற்றும் மாகாணக் கொடிகள் முறையே திருமதி.ஆர்.விஜயலட்சுமி,பிரதம செயலாளர்,வடமாகாண சபை  மற்றும் செல்வி ஆர்.எஸ். துரைராஜா, பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம் ஆகியோரினால் ஏற்றிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது, தொடர்ந்து அரச அலுவலர்கள் விதிமுறைகளிற்கு அமைவாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் அவர் உரையாற்றுயைில், அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கௌரவ. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மற்றும் கெளரவ ஆளுநர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் வெற்றிகரமாக அமுலாக்கம் செய்யப்பட்டது. மேலும் இவ் வெற்றிக்கு பங்காற்றிய அனைத்து அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனை சட்டகத்திற்கு ஏற்ப மாகாண நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்கு அலுவலர்கள் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

பிரதிப்பிரதம செயலாளர் - திட்டமிடல், பிரதிப்பிரதம செயலாளர் - நிதி, பிரதிப்பிரதம செயலாளர் - நிர்வாகம், பிரதிப்பிரதம செயலாளர் - பொறியியற் சேவைகள், ஆணையாளர் - மோட்டார் போக்குவரத்து, பணிப்பாளர் - முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவகம், உள்ளக கணக்காய்வாளர் மற்றும் ஏனைய அலுவலர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 
alt
 
alt
 
alt
 
 
alt
 
alt
 
alt