பிரதம செயலாளர் செயலகம்

  • செயற்பாடுகள்

பணிக் கூற்று

இலங்கை அரசினது அரசியல் யாப்பின் 13வது திருத்த சட்டத்தின் பிரகாரமும்,  மாகாண சபைச் சட்டம் மற்றும் அதனோடிணைந்த  திருத்தச் சட்டமூலங்களுக்கமைவாகவும் வழங்கப்பட்ட நிர்வாகக் கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுதல்.

பிரதான செயற்பாடுகள்

  • தேசிய அபிவிருத்தி சம்பந்தமான கொள்கைகளின் நோக்கங்களை அடையும் வகையில் வருடாந்த அபிவிருந்தித் திட்டங்களை உருவாக்குவதற்க்கும், வினைத்திறனாக அவற்றை நிறைவேற்றுவதற்கும் மற்றும் கண்காணிப்பதற்குமான வழிகாட்டுதல்களை வழங்குதல்
  • நிதி வளங்களை உச்ச பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் கொள்கைகள் நிதிக்கட்டுப்பாடுகள் மற்றும் வருடாந்தப் பாதீடு தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை மேற்கொள்ளுதலும், அத்துடன் மாகாணத்திற்கான நிதியினை உரிய பயன்பாட்டிற்கு உட்படுத்தும் வகையில் கணக்கீட்டு செயன்முறைகளையும், நடைமுறைகளையும் மற்றும் பொறுப்புக்களையும் விரிவாக்கும் வகையில் செயற்படு;தல்.
  • உள்ளகக் கட்டுப்பாட்டு முறைகள் மற்றும் உள்ளகக் கணக்காய்வு முறைகளை அமுல் செய்வதன் மூலம் மாகாணசபையின் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகளும், நடைமுறைகளும் திறமையாகவும், ஒழுங்கான முறையில் இயங்கவதற்கு வழிவகுத்தல்
  • வடமாகாண பொதுநிர்வாக செயற்பாடுகள் ஒழுங்கான வகையில் நடைபெறுவதனை உறுதிப்படுத்தல்.
  • மாகாணசபையினைச் சேர்ந்த ஆளணியினருக்குரிய பயிற்சி நெறிகளை நடாத்துவதற்கு வேண்டிய வழிகாட்டல்களை வழங்கும் வகையில் செயற்படுதல்.
  • ஏனைய மாகாண சபைகளுடனும் மற்றும் மத்திய நிரல் அமைச்சுக்களுடனுமான நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும் வகையில் இணைப்பினை ஏற்படுத்தல்.
  • கௌரவ ஆளுநர், மாகாண அமைச்சு வாரியம் மற்றும் மாகாணசபையினுடைய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தல்.
  • மாகாணசபை விடயங்கள் தொடர்பில் தேவையானபோது சட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வழிவகுத்தல்.