யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஐந்தாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை ஆளுநர் பார்வையிட்டார் - 18 ஜனவரி 2014

"யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியானது, பொருட்களையும் சேவைகளையும் காட்சிப்படுத்துவதுடன் புதிய முதலீட்டாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவுமே இக்கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது."

 

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் ஐந்தாவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சியினை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி 18 ஜனவரி 2014 அன்று பார்வையிட்டார்.
இவ்வர்த்தக கண்காட்சி 17 ஜனவரி 2014 அன்று ஆரம்பமாகி 19 ஜனவரி 2014 வரை நடைபெறுகின்றது. காட்சிக் கூடங்களை பார்வையிட்ட ஆளுநர் அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடினார்.
இங்கு பல்வேறுபட்ட சேவைகளை வழங்கி வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் 250 ற்கும் மேற்பட்ட கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு உணவு, விவசாயம், வாகனங்கள், சுகாதார பராமரிப்பு, காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் காட்சிக் கூடங்களாக இடம்பெறும் அதேவேளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல்யமான கல்விச்சேவை வழங்குனர்களின் காட்சிக் கூடங்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.