பிரதம செயலாளர் செயலகம்

கள அலுவலர்களின் ஆளுமைவிருத்திக்கான ”போவேர்ட்” (FORWARD) திட்டம்தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு - 21 ஜனவரி 2014

cs பொருளாதார அபிவிருத்தி அமைச்சானது பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு,  மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாகநிறுவகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து, ஜெய்கா நிறுவன அனுசரணையுடன் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் ”போவேர்ட்” (FORWARD) செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின்மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களிலுள்ள பங்காளர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் இலங்கை அபிவிருத்தி நிர்வாகநிறுவகத்தின் அனுசரணையுடன் இவ்விழிப்புணர்வு கருத்தரங்கு யாழ்மாவட்ட செயலக கலந்துரையாடல் மண்டபத்தில் 21 ஜனவரி 2014 அன்று ஒழுங்குபடுத்தப்பட்டது.  இந் நிகழ்வில் பிரதம செயலாளர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள், மாகாணச் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் பங்குபற்றியிருந்தனர். மேலும் இந்நிகழ்விற்கு இலங்கை அபிவிருத்தி நிர்வாகநிறுவகத்தின் சிரேஷ்டஆலோசகர், உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் பணிப்பாளர் மற்றும் ஜெய்கா நிறுவனத்தின் நிபுணர்களும் பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர்.யாழ்மாவட்டச் செயலாளர் திரு.எஸ்.அருமைநாயகம் அவர்கள் தனது வரவேற்புரையில் இந்நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பான விளக்கத்தினை வழங்கியிருந்தார்.

பிரதம செயலாளர் திருமதி.ர.விஜயலட்சுமி அவர்கள் தனது அறிமுக உரையில் கிராமப்புறங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளின் கூட்டுமுயற்சியின் அவசியம்  பற்றி வலியுறுத்தினார்.  இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் சிரேஸ்ட ஆலோசகர் மற்றும் திட்ட பிரதிப்பணிப்பாளர் திரு.ஏ.சீ.எம்.நபீல் இத்திட்டத்தின் அமுலாக்க ஏற்பாடுகள் தொடர்பான விளக்கத்தினை அளித்திருந்தார். தொடர்ந்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளர் அவர்களால் இத்திட்டத்தின் பின்னணி தகவல்கள் பற்றி கருத்துரை வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் பயிற்சி ஒழுங்குகள் மற்றும் முறைகள் தொடர்பாககலாநிதி. கென்சிமுசு, ஜெய்கா நிறுவனத்தின் குறுங்கால நிபுணரினால் விளக்கமளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இத்திட்டத்தினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளபங்காளர்களினுடனானகலந்துரைடயாடல்இடம்பெற்றது.