விவசாய அமைச்சு

பேராதனை பல்கலைக்கழக மீன்பிடித்துறையின் சிரேஸ்ட விரிவுரையாளர் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சரை சந்தித்தார் - 21 பெப்ரவரி 2014

பேராதனை பல்கலைக்கழகத்தின் விலங்கியல் விஞ்ஞானத்துறையின் விவசாய பீட சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி உதேனி எதிரிசிங்க அவர்கள் 20.02.2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தின் மீன்பிடித்துறையின் பீடத்திற்குரிய தலைமை பேராசிரியரைச் சந்தித்து உரையாடியிருந்தார்.

மறுநாள் காலை 10.30 மணியளவில் வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களுடன் மன்னாரில் ஒரு விசேட சந்திப்பை மேற்கொண்டிருந்தார். இதன் போது வட மாகாணத்தில் நன்னீர் மற்றும் கடல் நீர் மீன்பிடியில் உள்ள சவால்கள் மற்றும் எதிர்காலத்தில் மீன்பிடித்துறை தொடர்பில் மேற்கொள்ளக் கூடிய அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பன உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.