விவசாய அமைச்சு

முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவுக் கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு– 30 மார்ச் 2014

முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவுக் கூட்டம் 30.03.2014 அன்று முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்தில் முன்னைய சங்கத் தலைவர் கனகரத்தினம் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வடமாகாண மீன்பிடி, போக்குரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் கௌரவ பா.டெனீஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய போக்குவரத்து அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்திற்கான புதியநிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.