விவசாய அமைச்சு

வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பாலியாறு மேற்கு கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடினார் - 04 ஏப்ரல் 2014

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பாலியாறு மேற்கு கிராம மக்களை வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் கடந்த 04 ஏப்ரல் 2014 அன்று சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த சந்திப்பில் பாலியாறு கிராமத்துக்கு செல்லும் பிரதான பாதையின் புனரமைப்பு பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.