செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

சுகாதார உதவியாளர்களுக்கான நிரந்தர நியமன வழங்கல் - 19 மார்ச் 2015

சுகாதார தொண்டர்களாக நீண்டகாலமாக கடமையாற்றியவர்களுக்கு சுகாதார உதவியாளர் தரம் III இற்கு நியமனம் வழங்கும் நிகழ்வு 19.03.2015 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களும் விசேட விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வட மாகாண சபையின் பேரவைத் தலைவர் கந்தையா சிவஞானம், வட மாகாண சபை உறுப்பினர்களான வை.தவநாதன், சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரட்ணம், அ.பரஞ்சோதி, சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் மற்றும் உத்தியோகத்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இதில் யாழப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 251 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 133 பேருக்கும் முதற்கட்டமாக நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டது.