செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்ட சுகாதார உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கல் - 21 மார்ச் 2015.

வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களில் 180 நாட்கள் வேலையை பூர்த்தி செய்தவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் 21.03.2015 மு.ப 10.00 மணிக்கு வவுனியா நகர சபை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி.ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபையின்  பிரதி தவிசாளர், வட மாகாண சபை உறுப்பினர்கள், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன்,  சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர், பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 186 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 101 பேருக்கும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 163 பேருக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.