Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் தொடர்பான கலந்துரையாடல் 19 மார்ச் 2015

சுகாதார அமைச்சு

தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் தொடர்பான கலந்துரையாடல் 19 மார்ச் 2015

வட மாகாணத்தில் ஆரம்பக் கட்டமாக, தேசிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தினை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து திணைக்களங்களினதும் பூரண ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காகவும், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காகவும் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்கள் தலைமையில் மாகாண மட்ட நுளம்புக் கட்டுப்பாட்டுக் கூட்டம் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மகாநாட்டு மண்டபத்தில் 19.03.2015 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள், உள்ளூராட்சி ஆணையாளர்;, உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள்,  சுகாதார கல்வி உத்தியோகத்தர்கள், பிராந்திய மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டிற்குரிய நுளம்புக் கட்டுப்பாட்டு வாரத்தில், அண்மைக் காலத்தில் ஏற்பட்ட டெங்குநோய் நிலைமையின் படி, நாட்டிலுள்ள அனைத்துப் பிரதேசங்களையும் மிக அதிக ஆபத்தான இடங்கள், ஆபத்தான இடங்கள், ஏனைய இடங்கள் எனப்பிரித்து அதற்கேற்றவாறாக நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 26,27,28 ஆம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட மிக அதிக ஆபத்தான பிரதேசங்களிலுள்ள வீடுகள், பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், மத வழிபாட்டுத்தலங்கள் ஏனைய பிற இடங்களை குழுக்களாகச் சென்று பரிசோதனை செய்து நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

மார்ச் 29 ஆம் திகதி பொது இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், வடிகால்கள், மயானங்களை  குழுக்களாகச் சென்று பரிசோதனை செய்து நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.மார்ச் 30,31, ஏப்ரல் 01 ஆம் திகதிகளில் தெரிவு செய்யப்பட்ட ஆபத்தான, ஏனைய இடங்களிலுள்ள வீடுகள், பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள், கட்டிட நிர்மானவேலை நடைபெறுமிடங்கள், தொழிற்சாலைகள், மதவழிபாட்டுத்தலங்கள், ஏனைய பிற இடங்களை குழுக்களாகச் சென்று பரிசோதனை செய்து நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளது.

இவ்வாண்டின் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை குழு நடவடிக்கைகளில் குடியிருப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நிறுவனங்களின் டெங்குஃ நுளம்புக் கட்டுப்பாட்டு குழு உறுப்பினர்கள், பொலிஸ், முப்படை வீரர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், தொண்டர்கள், உள்ளூராட்சி ஊழியர்கள், கிராமிய டெங்குக் குழு உறுப்பினர்கள், மத தலைவர்கள், சமூகத் தலைவர்களின் பங்களிப்பைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட குழுக்களைக் கூட்டி கலந்துரையாடி இவ்வேலைகளைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இத்துப்பரவு வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆக்க பூர்வமான பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் வழங்கி நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இவ்வேலைத்திட்டம் வெற்றிபெற ஒன்றிணைந்து செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.