செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

“புற்றுநோயுடன் போராடு” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு நடைபவனியும் நிகழ்வும் - 24 மார்ச் 2015

உலக சுகாதார புற்றுநோய் தினத்தை மாகாண மட்டத்தில் அனுஸ்டிக்கும் முகமாக 24.03.2015 ம் திகதி காலை 7.30 மணிக்கு விழிப்புணர்வு நடைபவனி “புற்றுநோயுடன் போராடு” எனும் தொனிப் பொருளில் யாழ் நகரில் நடைபெற்றது. யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமணையிலிருந்து ஆரம்பித்த நடைபவனி யாழ் போதனா வைத்தியசாலை வீதி, கே.கே.எஸ் வீதி, ஸ்ரான்லி வீதி, யாழ் மத்திய கல்லூரி வீதியூடாக யாழ் வீரசிங்க மண்டபத்தை சென்றடைந்தது தொடர்ந்து யாழ் வீரசிங்க மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது.

 இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன் அவர்களும், விசேட விருந்தினராக வட மாகாண சபையின் பேரவைத் தலைவர் கந்தையா.சிவஞானம், வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இஷனி பெர்ணான்டோ ஆகியோரும், கௌரவ விருந்தினராக வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சின்னத்துரை.தவராசா கலந்து சிறப்பித்ததோடு, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், வடமாகாண சுகாதார அமைச்சின் உதவி செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர், பிராந்திய சுகாதார பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மத தலைவர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.