செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நடைபவனியும் நிகழ்வுகளும்- 20 மார்ச் 2015

உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு “புன்னகை வாழ்நாள் முழுவதும்” என்ற தொனிப் பொருளில் விழிப்புணர்வு நடைபவனி ஒன்று 20.03.2015 அன்று காலை நடைபெற்றது.

இந்நடைபவனி, மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இருந்து ஆரம்பித்து மன்னார் நகரை வலம் வந்து மீண்டும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினை சென்றடைந்தது. தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வில் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், வட மாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் விசேட அதிதிகளாகவும், வடமாகாண சபை உறுப்பினர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்ததோடு சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர், மாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், பிராந்திய பல் வைத்திய அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு மன்னார் தோட்டவெளியில் விசேட பற்சிகிச்சை முகாமும் நடைபெற்றது.