சுகாதார அமைச்சு

சுகாதார சேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஐயம் - 28 மார்ச் 2015

 சுகாதாரசேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி அவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு 28.03.2015 அன்று விஐயம் செய்து  வைத்தியசாலை நடவடிக்கைகளைப் பார்வையிட்டார், 

 தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், வைத்தியசாலை நிர்வாகத்தினால் வைத்தியசாலையின் வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கொள்வனவு செய்யவும்,  மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் ஊசிகள், மருந்துகட்டும் பஞ்சு மற்றும் கழிவுகளை எரியூட்டுவதற்குரிய கட்டடம் அமைக்கவும், ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு தேவையான உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்குமென மூன்று வேலைத்திட்டங்களுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது. அமைச்சர் அவர்கள் வேலைத்திட்டங்களுக்கான நிதி வழங்குவதாக உறுதியளித்தார்.