சுகாதார அமைச்சு

சுகாதார சேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு விஐயம் - 28 மார்ச் 2015

 சுகாதார சேவைகள் இராஜங்க அமைச்சர் ஹசன் அலி அவர்கள் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு 28.03.2015 அன்று விஐயம் செய்து வைத்தியசாலை நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். அதன் போது வைத்தியசாலை நிர்வாகத்தினால் வைத்தியசாலையின் தேவைகள் சம்பந்தமான வேண்டுகோள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

 

வட பகுதியில் மனநோயாளர் விடுதி, புற்றுநோய் நோயாளர் விடுதிகள் உட்பட பல விடுதிகளைக் கொண்ட இவ்வைத்தியசாலைக்கு வைத்திய நிபுணர்கள் மற்றும்; தாதியர் பற்றாக்குறை நிலவுவதாக இராஐhங்க அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. அத்தோடு இவ்வைத்தியசாலையை மாகாண பொது வைத்தியசாலையாக தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.