சுகாதார அமைச்சு

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நோயாளர் விடுதி திறந்து வைக்கப்பட்டது – 02 ஏப்ரல் 2015.

முல்லைத்தீவு பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திரசிகிச்சை நோயாளர் விடுதியானது 02.04.2015 அன்று காலை 10.00 மணிக்கு சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

 இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன், வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிபர் திருமதி.ரூபாவதி கேதீஸ்வரன், வட மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பின்னர் சுகாதார அமைச்சர் இராஜித சேனாரத்ன அவர்கள் வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடி மாவட்டத்தில் வைத்தியதுறையில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்தார்.