சுகாதார அமைச்சு

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது - 02 ஏப்ரல் 2015.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் 02.04.2015 அன்று காலை 11.00 மணிக்கு சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன்,  வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள், அரச அதிபர் திருமதி.ரூபாவதி கேதீஸ்வரன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி பி.ஜி.மகிபால, வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன், அமெரிக்கெயார் செயல்திட்டத்தினைச் சேர்ந்த ராசல் கிரான்ஜர், மாகாண சுகாதார பணிப்பாளர், முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் மதகுருமார், பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.