சுகாதார அமைச்சு

கிளிநொச்சி வைத்தியசாலையில் பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது – 02 ஏப்ரல் 2015.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பிராந்திய இரத்த வழங்கல் நிலையம் 02.04.2015 அன்று மதியம் 2.00 மணியளவில் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் வைத்திய கலாநிதி இராஜித சேனாரத்ன அவர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரன்,  வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர், வட மாகாண சபை உறுப்பினர்கள், வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், தாதியர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் பின்னர் சுகாதார அமைச்சர் வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடி மாவட்டத்தில் வைத்தியத்துறையில் உள்ள பிரச்சனைகளை கேட்டறிந்தார்.