ஆணையாளர்

jude

திரு.தி.விஸ்வரூபன்

ஆணையாளர்
நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம் 
மீனாட்சி அம்மன் கோவில் வீதி,
பண்ணை, யாழ்ப்பாணம்

தொ.பே: 0212057102   
கை.தொ.பே: 077-2348951
மின்னஞ்சல்:pccsnp@gmail.com 

நன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்

 
 பணிநோக்கு
 
சிறுவர் சம்பந்தமான தேசிய, மாகாண கொள்கைகளை அமுல்படுத்த உதவுதல் மற்றும் அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளித்துப் பாதுகாப்பளிக்கையில் பாதுகாப்பற்ற சிறார்கள், துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறார்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சிறார்கள் ஆகியோருக்கு சம வாய்ப்பினை அளித்தல்.
 
 குறிக்கோள்கள்
 • சிறுவருக்கான சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல். 
 • நன்னடத்தைப் பாதுகாவல் கட்டளையை ஆக்குவதற்கு நீதிமன்றத்திற்கு உதவியளித்தல்.
 • சிறுவருக்கென மாற்றீடான கவனிப்பு முறைமையை ஏற்பாடு செய்தலும் வசதியளித்தலும்.
 • சிறுவர் தவறாளர்களை புனர்வாழ்வு மற்றும்  புனருத்தாரணம் கருதி நிறுவன மயப்படுத்தலும் அவர்களுக்கு  கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில்சார் பயிற்சியை ஏற்பாடு செய்தலும் மீள சமூகமயப்படுத்தலும்.
 • பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உள சமூக ஆதரவை ஏற்பாடு செய்தல்.
 • வறுமை அல்லது வேறு சமூக தேவைப்பாடுகள் காரணமாக வாழ்வில் சீர்குலையக்கூடிய சிறுவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்தலும், சிறுவர் உழைப்பைத் தடுத்தலும்.
 • சிறுவர் தொடர்பில் மிகவும் கருணை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நீதிசார் நடவடிக்கைகளை எடுத்தல் அத்துடன் 
 • தேவையிலுள்ள சிறுவருக்குச் சேவைகளை ஏற்பாடு செய்தல்.

 

பிரதான செயற்பாடுகள்

 • சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கென நடவடிக்கை எடுத்தலும், அனாதை மற்றும் கைவிடப்பட்ட சிறுவர் அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கவனிப்பு மற்றும் பாதுகாப்பிற்கென நீதிமன்றக் கட்டளையைப் பெறுதல்.
 • துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய சிறுவரொருவரின் உரிமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கின்ற முறைகளைப் பற்றியும் விழிப்புணர்வொன்றை உருவாக்குதலும், சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு தொடர்பிலான ஆராய்ச்சியை கொண்டு ஆற்றுப்படுத்தலும்.
 • தேவையிலுள்ள சிறுவரின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளுவதற்கான தோதான படிமுறைகளை எடுத்தலும், தமது பெற்றோருக்கு கீழ்படிவல்லாத, பாடசாலைக்கு ஒழுங்கீனமான, பிடிவாதமான, சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட சிறுவர்களை ஆற்றுப்படுத்தலும்.
 • சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த மாகாண, மாவட்ட அல்லது பிரதேசக் குழுக்களையும் அதன் உப குழுக்களையும் தாபித்தல்.
 • சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான முறைப்பாடுகளை பொதுமக்களிடமிருந்து பெறுதலும் அவசியமானவிடத்து, தோதான அதிகாரத் தரப்பினருக்கு முறைப்பாடுகளை ஆற்றுப்படுத்தலும்.
 • தேவையுள்ள சிறுவருக்கு அவசரமானதையும் மற்றும் வேறு உதவிகளையும் வழங்குதலும் சிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களில் தேவைநாடும் சிறுவர்களை அனுமதித்தலும்.
 • நிறுவன மயப்படுத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் குடும்பத்துடன் மீள ஒருங்கிணைப்பதற்கென வசதியளித்தலும் உதவி வழங்குதலும்.
 • மகவேற்புக்கு உதவியளித்தலும் வசதியளித்தலும்.
 • சட்ட உயர்தொழிலர் மற்றும் சட்டம்சாரா உயர் வாண்மையுளரின் சேவைகளைப் பெறுதல்.
 • சிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு உரிமம் அல்லது சான்றிதழ்களை வழங்குதலும் ஏதேனும் சேவைகளுக்கு அங்கீகாரத்தை அளித்தலும் அத்துடன் அத்தகைய நிறுவனங்களை மேற்பார்வை செய்தலும் கண்காணித்தலும்.
 • சிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு வழங்குகின்ற சேவைகளுக்கென ஏதேனும் கட்டணத்தை அறவிடுதல் அல்லது விதிப்பனவை விதித்தல்.
 • 1944 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க தவறாளர்களின் நன்னடத்தைப் பாதுகாவல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக, நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் நன்னடத்தை பாதுகாவல் கட்டளையினைப் பின்பற்றி எவரேனும் தவறாளரின் மேற்பார்வையைப் பொறுப்பெடுத்தலும், கட்டளையில் உட்புகுத்தப்பட்ட நிபந்தனைகள் முழுமையாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றப்படுகின்றனவா என அவதானித்தல்.
 • நன்னடத்தை பாதுகாவல் கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறான அல்லது அலுவலர் பொருத்தமானதெனக் கருதக்கூடியவாறான அதற்கமைவாக அத்தகைய இடைவெளிகளில் எவரேனும் தவறாளரைப் பார்வையிடுதலும், அவரிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளுதலும்.
 • எவரேனும் தவறாளரின் நடத்தை மற்றும் முன்னேற்றம் தொடர்பில்; அத்தகைய காலாகால அறிக்கைகளைச் தயாரித்தல்.
 • மேற்பார்வையின் கீழுள்ள தவறாளருக்கு மதியுரையளித்தல், உதவியளித்தல் மற்றும் நட்பாக நடாத்தல் அத்துடன் அவசியமானவிடத்து, அவருக்கு தொழில் மற்றும் தங்குவதற்கான உறைவிடத்தை பெற்றுக்கொடுக்க முயற்சித்தல்.
 • நீதிமன்றத்திற்கு எவரேனும் தவறாளரின் குணநலன், முன்னொழுக்காறு, சூழல் மற்றும் உள அல்லது உடல் நிலை தொடர்பிலான எல்லா அத்தகைய தகவல்களையும்; சமர்ப்பித்தல்@ நன்னடத்தைப் பாதுகாவலுக்கென வழக்கின் பொருத்தமான தன்மை பற்றி எவரேனும் தவறாளரின் மேற்பார்வை நன்னடத்தைப் பாதுகாவல் அலுவலரால் பொறுப்பேற்கமுடியுமா என்பது பற்றியும் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தல்.
 • திணைக்கள உள்ளக நிருவாகத்திற்கான அவசியமான விதிகளை உருவாக்குதல். அத்துடன்
 • பொதுவாக திணைக்களத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கு அவசியமானவாறான அத்தகைய வேறு எல்லாக் கருமங்களையும் புரிதல்.

படிவங்கள் - நன்னடத்தை & சிறுவர் பராமரிப்பு

( Forms which are used by the Probation Officers regularly)