Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
சர்வதேச யோகா தின நிகழ்வுகள் - 2015

சுகாதார அமைச்சு

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் - 2015

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் மாகாண ரீதியாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன. இவற்றில் 21.06.2015 ம் திகதி அன்று பருத்தித்துறை ஆயுள்வேத மத்திய மருந்தகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட “யோகசனமும் தியானமும் - ஆரோக்கிய வாழ்வின் மந்திரம்” எனும் தொனிப் பொருளில் ஆன நிகழ்வொன்று பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள யா ⁄தும்பளை சிவப்பிரகாச மாகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில், மாகாண சுதேச மருத்துவ ஆணையாளர் வைத்தியக் கலாநிதி .(திருமதி).சியாமா துரைரட்ணம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக பருத்தித்துறை நகரசபை நகரபிதா சட்டத்தரணி சபா.ரவீந்திரன், பருத்தித்துறை பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன், பருத்தித்துறை பிரதேச ஆயுள்வேத பாதுகாப்புச் சபைத் தலைவரும், யா ⁄தும்பளை சிவப்பிரகாச மாகாவித்தியாலய அதிபருமான கே.யோகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். சித்த ஆயுள்வேத மருத்துவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். இந் நிகழ்வில் தும்பளை “யோக சாந்தி நிலைய” யோகா ஆசிரியரின் தலமையில் யோகா காட்சிப்படுத்தல்களும் வைத்தியக் கலாநிதி .பிரபாகரன் தலமையில் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஊழியர்களின் யோகா காட்சிப்படுத்தல்களுக்கான விளக்கமும் வழங்கப்பட்டது.

மேலும் இந்திய உப உயர்ஸ்தானிகரத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்டு யாழ் கல்வியற் கல்லூரி சடைபெற்ற நிகழ்வில் மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் சார்பாக வைத்தியக் கலாநிதி .(திருமதி).எழினி கோகுலன் அவர்களின் “யோகசனமும் ஆரோக்கியமும்” எனும் தொனிப் பொருளினான காட்சிப்படுத்தல்களும் இடம் பெற்றது.

மேலும் தொடர்ச்சியாக யோகா விழிப்புணர்வு நிகழ்வுகள் பல பாடசாலை மட்டங்களிலும் அரச வலய மட்டங்களிலும் கல்வி நிலையங்களிலும் மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. யோகாசனத்தின் ஊடாக உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் தற்போது சமூகத்தில் காணப்படும் எதிர் மறையான, கலாசார சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் மாணவர்களையும் பொதுமக்களையும் தயார் படுத்துதலுமே இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் ஆகும்.