chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்திற்கான இடைநிலை ஆய்வுக்குழுவினர் வட மாகாணத்திற்கு விஜயம்

விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் (IFAD) இடைநிலை ஆய்வுக்குழுவினர்  இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்ய 26 யூலை தொடக்கம் 12 ஆகஸ்ட் 2015  வரையான காலப்பகுதியில்  வட மாகாணத்திற்கு   விஜயம் செய்துள்ளனர்.

இவ்விஜயத்தின் போது விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் இலங்கைக்கான திட்ட அலுவலர் அனுர ஹேரத் தலைமையிலான குழுவினர்  30 யூலை 2015 அன்று வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் அவர்களை பிரதம செயலாளர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். 

இக்கலந்துரையாடலில் விவசாய அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், பணிப்பாளர் – நீர்ப்பாசனத் திணைக்களம், பணிப்பாளர் – விவசாயத் திணைக்களம், பணிப்பாளர் – கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் மற்றும் இரணைமடு நீர்ப்பாசன அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.