chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

பொது நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான பயிற்சிப் பட்டறை – 2015

அரசியலமைப்பு கற்கைநெறிகள் நிறுவனமானது வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி நிலையத்துடன் இணைந்து வடக்கு மாகாண சபை அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பொது நிர்வாகம் மற்றும் நிதி தொடர்பான மூன்று நாள் பயிற்சிப் பட்டறையை 27, 28 மற்றும் 29 ஆகஸ்ட் 2015 ஆகிய திகதிகளில் நடாத்தியது. 

இப்பயிற்சிப் பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் வட மாகாண சபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும் அவைத் தலைவர் க.சிவஞானம் ஆகியேர் கலந்து கொண்டனர். இப்பயிற்சிநெறிக்கு ஜனாதிபதி சட்டத்தரணி டாக்டர் ஜயம்பதி விக்ரமரட்ண, நிதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான அசோக குணவர்த்தன, மேல் மாகாண சபையின் முன்னாள் செயலாளர் லலித் கன்னங்கர மற்றும் பேராதனைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறையின் பேராசிரியர் ஏ.எம்.நவரட்ண பண்டார ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.