Deprecated: iconv_set_encoding(): Use of iconv.internal_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 27

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.input_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 28

Deprecated: iconv_set_encoding(): Use of iconv.output_encoding is deprecated in /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php on line 29

Warning: session_start(): Cannot send session cookie - headers already sent by (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658

Warning: session_start(): Cannot send session cache limiter - headers already sent (output started at /home/npgov/public_html/tamil/libraries/joomla/string/string.php:27) in /home/npgov/public_html/tamil/libraries/joomla/session/session.php on line 658
விசேட தேவையுடையோரின் புள்ளி விபரங்களை திரட்டும் நடவடிக்கை

செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

விசேட தேவையுடையோரின் புள்ளி விபரங்களை திரட்டும் நடவடிக்கை

வட மாகாணத்திலுள்ள விசேட தேவையுடையோரின் புள்ளிவிபரங்களை திரட்டும் நடவடிக்கை வட மாகாண சபையின் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேற்படி ஆய்வுக்காக ரப்லட் கணினிகள் ஆசிய மன்றத்தின் (The Asia Foundation) நிதி உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக ரப்லட் கணினிகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வு, 14.10.2105 அன்று காலை 11.00 மணிக்கு  நடைபெற்றது.

முதல் கட்டமாக 15 ரப்லட் கணினிகளை ஆசிய மன்றம் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சுக்கு வழங்கியுள்ளது.

இந்நிகழ்வில் வட மாகாண சபையின் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், செயலாளர் சி.திருவாகரன், பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கிளிநொச்சி, ஆசிய மன்ற  பிரதி குழுத்தலைவர் (LEG Project) அ.சுபாகரன், ஆசியாமன்ற பிரதிநிதிகள், வைத்தியர்கள் மற்றும் சுகாதார துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.