புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

வட மாகாண சபையின் மீன்பிடி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மற்றும் யுத்தத்தில் தமது பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வவுனியா மாவட்டத்தில் பயனாளிகளிடம் தரவு சேகரிக்கும் நிகழ்வு 12 ஒக்டோபர் 2015 அன்று வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் இடம்பெற்றது. 

குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் விசேட தெரிவின் மூலம் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 147 பயனாளிகளுக்கான தேவை மதிப்பீடு தொடர்பான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபையின் உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன், ஆர்.இந்திரராஜா, எம்.பி.நடராஜா, எம்.தியாகராசா மற்றும் அமைச்சின் செயளாளர் எஸ்.சத்தியசீலன், வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.பெலிசியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.