chief-secretariat2

பிரதம செயலாளர்

wijialudchumi

திரு. அ. பத்திநாதன்
பிரதம செயலாளர்
வட  மாகாண சபை

பிரதம செயலாளர் செயலகம், கண்டி வீதி, கைதடி. யாழ்ப்பாணம், இலங்கை.

தொ.பே: 021-2220843
தொ.நகல்:021-2220841
மின்னஞ்சல்:
chiefsecnpc@gmail.com

 

பிரதம செயலாளர் செயலகம்

மத்திய மாகாண மற்றும் வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களின் அனுபவங்களை பரிமாறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந் நிகழ்ச்சித் திட்டம் மத்திய மாகாண பிரதம செயலாளர் கோரிக்கைக்க அமைவாக வட மாகாண பிரதம செயலாளரினால்  ஆரம்பித்துவைக்கப்பட்டது. மத்திய மாகாண சபையிலிருந்து மத்திய மாகாண அவைத்தலைவர் தலைமையில் வருகைதந்த குழுவில் பிரதி அவைத்தலைவர், மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய மாகாண செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் ஆகியோரின் நட்பு பயணம்  காங்கேசந்துறையிலிருந்து 23 ஆம் திகதி அன்று தொடங்கியது.

இக்குழுவினர் சில விவசாய அபிவிருத்தித் தளங்கள், தொழிற்துறை பேட்டை மற்றும் வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் செற்படுத்தப்படும் கோழி பண்ணை ஆகியனவற்றிற்கு விஜயம் செய்தனர். மேலும் வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளினால் ஈர்க்கப்பபட்ட பிரபல்யம் பெற்ற சுற்றுலாத் தளமான நிலாவரை வற்றாக்கிணறினையும் பார்வையிட்டனர். தொடர்ந்து வட மாகாண விவசய திணைக்களத்தின் வழிகாட்டதலினால் நடாத்தப்படும் சேதன வாழைத் தோட்டம் மற்றும் முந்திரிகைத் தோட்டம் ஆகியனவற்றை பார்வையிட்டு வியப்படைந்தனர்.

வடமாகாண பிரதம செயலாளரினால் ஒழுங்கமைக்கப்பட்டு வடமாகாண சபை அவைத்தலைவர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சர், விவசாய அமைச்சர், மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் களினால் கலந்து சிறப்பிக்கப்பட்ட நண்பகல் 11 மணி அமர்வில் இரண்டு மாகாணங்களினதும் அனுபவங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டது.

அத்தோடு இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது மாகாண சபையினால் வழங்கப்பட்ட மதிய உணவோடு நிறைவுபெற்றது.