பிரதம செயலாளர் செயலகம்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட வருமான வரி பரிசோதகர்களுக்கான அறிமுக பயிற்ச்சி நிகழ்ச்சித்திட்டம்

புதிதாக ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட வருமான வரி பரிசோதகர்களுக்கான பத்துநாட்களைக் கொண்ட அறிமுக பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் வடமாகாண முகாமைத்துவ பயிற்ச்சி அலகினால் ஒழுங்கு செய்யப்பட்டு 26 ஒக்டோபர் 2015 தொடக்கம் 06  ஒக்டோபர் 2015 வரை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு 26  ஒக்டோபர் 2015 அன்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, கோப்பாய் இல் அமைந்துள்ள வடமாகாண முகாமைத்துவ பயிற்ச்சி அலகின் பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது. உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் - ஆளணி மற்றும் பயிற்ச்சி ஏ.சிவபாலசுந்தரம் ஆகியோர் விருந்தினர்களாக ஆரம்ப நாள் நிகழ்வினை சிறப்பித்தனர்.

இவ் அறிமுக பயிற்சி நிகழ்ச்சியில் 36 வருமான வரி பரிசோதகர்கள் கலந்துகொண்டனர்.  இப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமானது அலுவலர்களின் சேவை தொடர்பான அடிப்படை அறிவு, திறன், பணிச் சூழல் தொடர்பான புரிதல்கள் மற்றும் பண்புகள் போன்றவற்றினை விருத்திசெய்து தரமான அரச சேவையை வழங்கக்கூடியதாக அமைந்திருந்தது.