செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த விசேட தேவைக்குட்பட்டோருக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கல்

வவுனியா மாவட்டத்திற்கு உட்பட்ட விசேடதேவைக்குட்பட்டோருக்கான மலசலகூடம் அமைத்தலுக்கான முதலாம் கட்ட கொடுப்பனவு வழங்கல் நிகழ்வு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் 06.11.2015 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

வடமாகாணத்திலுள்ள விசேடதேவைக்குட்பட்டவர்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்காக தலா ஒருவருக்கு ரூபா 122,000 வடக்கு மாகாண சுகாதார சுதேசவைத்திய மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் புனர்வாழ்வு அலகினூடாக ஒதுக்கப்பட்ட நிதிக்கொடுப்பனவு வவுனியா மாவட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கும்  வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  அமைச்சர்  வைத்தியகலாநிதி  ப.சத்தியலிங்கம் அவர்களால் செட்டிக்குளம், வவுனியாநகரம், வவுனியாவடக்கு பிரதேசசெயலகங்களிற்குட்பட்ட 37 பயனாளிக்கான முதற்கட்ட கொடுப்பனவாக 30,000 ரூபாவுக்கான காசோலையினை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபையின் உறுப்பினர்களான த.லிங்கநாதன், ஏ.டி.டிசெனிவிரத்ண, ஆர்.இந்திரராஐா ஏ.ஜயத்திலகே மற்றும் வடமாகாணசபை சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி.சி.சுஜிவா வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மோகநாதன்,  வவுனியா பிரதேசசெயலாளர் எஸ் உதயராஜா, உயர்அதிகாரிகள்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.