செயலாளர்

திரு.சி.திருவாகரன்

செயலாளர்  
     சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள்  அமைச்சு

1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம். 

 

தொபே: +94-21-222 0800
தொ.நகல்: +94-21-222 0806 கை.தொ: 0773800022

மின். அஞ்சல்:
mhealthnpc@gmail.com

பணிக்கூற்று

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

சுகாதார அமைச்சு

மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு கட்டடத் தொகுதி திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளி நோயாளர் பிரிவிற்கான கட்டடத் தொகுதியானது வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களினால் 14 நவம்பர் 2015 அன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கத்தை முன்மாதிரியாக கொண்டு எய்ட்ஸ், கயரோகம், மலேரியா நோய்களை அழித்தொழிப்பதற்கான உலக நிதியத்தின் கருத்திட்டத்தின்  (GFATM Project)  கீழ் இக்கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சாந்தி, மருத்துவர் சி.சிவமோகன், வட மாகாண சபை உறுப்பினர்களான கமலேஸ்வரன், சி.சிவநேசன், முல்லை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி பூங்கோதை மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

  width=500

 width=500

 width=500

 width=500